பொதுமுடக்கம் மட்டுமே  தீர்வாக அமையும்

அமெரிக்க நிபுணர் கருத்து!

கொரோனா இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க, அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை இந்தியா அறிவிக்க வேண்டுமென அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை உலகமே பரிதாப கண்ணோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகக் அதிகளவு இருப்பதை தொடர்ந்து, பல நாடுகள் இந்தியாவுக்கு விமானம் மூலம் மருத்துவ ஆக்ஸிஜனை அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சில நாடுகள், நிதி உதவியும் வழங்கி வருகின்றது.

அந்தவகையில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்த நாடான அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி, இன்று பேட்டியொன்றில் ‘இந்தியா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. 

இப்படியான சூழலில், உடனடி தீர்வு என்னவென்பதையே இந்தியா பார்க்க வேண்டும். அந்த உடனடி தீர்வு, பொதுமுடக்கம்தான். சில வாரங்களுக்காவது, இந்தியா பொதுமுடக்கத்தில் இருக்க வேண்டும்.

யாரொருவருக்குமே, நாடு தழுவிய முழு பொதுமுடக்கம் என்பது ஏற்கமுடியாத விஷயம்தான். ஆனால், இப்போதைய சூழல் அதுமட்டுமே மிகச்சிறந்த பலனை தரும். இந்த பொதுமுடக்கத்தை, ஆறு மாதங்கள் வரை முழுவதுமாக நீட்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அடுத்த சில வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தினால் போதும்.

கொஞ்சம் சூழல் சரியானபிறகு, அந்த முடக்கத்தை தளர்த்திக்கொண்டு செயல்பட தொடங்கலாம். இதனால் கொரோனாவும் பரவுதலும் தடுக்கப்படும்; மேற்கொண்டு பொருளாதார பின்னடைவும் ஓரளவு தவிர்க்கப்படும். அதைவிட்டுவிட்டு, இந்தியாவில் கொரோனா ஒழிந்துவிட்டது என அறிவிப்பது, அவசரத்தில் செய்யும் செயல்’ எனக்கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here