மலேசிய இந்தியர்களின் குரலாக ஒலிக்கிறது மக்கள் ஓசை நாளிதழ் 

 

இந்தியர்களின் வாழ்வுக்கு  அரண்

மலேசிய இந்தியர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மக்கள் ஓசை நாளிதழ் நாட்டில் இந்தியர்களின் வாழ்வுக்கு ஓர் அரணாக விளங்கி வருகின்றது  என்றார் பகாங், பெரா மாவட்ட பெங்கெராக் கொம்யூனிட்டி நெகாரா சமூக நல இயக்கத்தின் தலைவர் பெ. சரவணன்.

இந்திய சமுதாயம் கல்வியில் இன்னும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் . அப்போதுதான் எதிர்காலச் சவால்களுக்கு முழுமையாக ஈடு கொடுக்க முடியும். குறிப்பாக தற்போது மாணவர்கள் மத்தியில் அதிகமான கைப்பேசி மோகத்தின் காரணமாக உளவியல் ரீதியான பாதிப்புகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றது.

இந்திய மாணவர்களுக்கு நற்கல்வியையும் நற்பண்புகளையும் ஊட்டக் கூடிய ஆற்றல் நாட்டில் உள்ள தமிழ்நாளேடுகளுக்கு உள்ளது. இதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் மக்கள் ஓசை நாளிதழ் அதற்கான பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றது.

குறிப்பாக இன்றைய காலகட்ட ஊடகங்கள் மத்தியில் அரசியல் , கல்வி, தொழில்நுட்பம் பொருளாதாரம், மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற புதிய புதிய விஷயங்களை மக்கள் மத்தியில் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சேர்க்கின்றது.

இதில் புதிதாக திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவரும் ’ இல்லந்தோறும் மக்கள் ஓசை பள்ளி தோறும் இன்பத் தமிழ் பிரத்தியேக பக்கத்தில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக  , நேரம் காலம் பாராமல் வேலை செய்யும் மக்கள் ஓசை ஆசிரியர் குழுவினர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

தற்போது இந்திய மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. ஆகையால் இந்தியப் பெற்றோர் மாணவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வீட்டிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தாய்மொழியான தமிழை ஒவ்வோர் இந்தியரும் கட்டிக்காக்க வேண்டும். அந்த வகையில் பெ.சரவணன் பள்ளிதோறும் மக்கள் ஓசை நாளிதழ் திட்டத்திற்கு பகாங் பெரா கெமாயான் தமிழ்ப் பள்ளிக்கு நாள் ஒன்றுக்கு 5 பிரதிகள் என்று மூன்று மாதங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டார் சரவணன்.

-பி.ராமமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here