சென்னை: கண்கள் சிவப்பாக இருந்தால் அது மெட்ராஜ் ஐ என எடுத்துக் கொள்ள கூடாது. கருப்பு பூஞ்சை நோயாக இருக்கும் என டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் சிலருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். சில நோயாளிகளுக்கு கேன்சரும் கொரோனாவும் இருக்கும். நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை அதிகம் கொடுப்பது, ஆக்ஸிஜன் பிராண வாயுவை அதிகமாக கொடுப்பது ஆகியவற்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பொதுவாக உடலில் தொற்றுகள் ஏற்படும். இது அதிகளவில் ஏற்படுகிறது. அதற்கு பெயர்தான் மியூகோர்மைகோசிஸ். இந்த பூஞ்சை மூக்கிலிருந்து தொற்றுகிறது. வாய் எல்லாம் தொற்று ஏற்படுகிறது. மூக்கு, வாய் என பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மெதுவாக கண்களில் தொற்றை ஏற்படுத்துகிறது.

இது கண்களை பாதிக்கும். முகத்தில் இருக்கும்போதும் கண்களில் இருக்கும் போது இந்த பூஞ்சையை குணப்படுத்தாவிட்டால் நேராக மூளைக்குச் செல்கிறது. அங்கு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இது மிகவும் மோசமான தொற்றாகும். கண்கள் முழுவதும் இது தொற்றை ஏற்படுத்தும்.
இதற்கு கருப்பு பூஞ்சை என ஏன் சொல்கிறோம் என்றால் தோலில் தொற்று ஏற்படும் போது அங்குள்ள செல்கள் இறப்பதால் தோல் கருப்பு நிறமாகிறது. மூக்கிலிருந்து சளி போல் கருப்பாகவும் வரலாம். இதனால்தான் நாம் கருப்பு பூஞ்சை என்கிறோம். சைனஸ் பகுதி, வாய் பகுதியில் தொற்று ஏற்படும்.
தோலில் உள்ள செல்கள் இறந்து தோலே கருப்பு நிறத்தில் மாறிவிடும். தூக்கமின்மையால் ஏற்படும் கருப்பு நிறத்தை ஏதேனும் கிரீம் கொண்டு சரி செய்து கொள்ளலாம். உடனடியாக பார்வை போகிறது என்றால் கண் டாக்டரை அணுக வேண்டும். முதலில் கண்களில் சிகப்பாக இருந்தாலே கண் டாக்டரிடம் சென்றுவிட வேண்டும்.

அது மெட்ராஸ் ஐ என எடுத்துக் கொள்ள கூடாது. தலைவலி, கண்களில் பார்வை போதல், கண் சிவத்தல் ஆகியவை இந்த நோய்க்கு அறிகுறியாகும். இந்த நோய் ஸ்டீராய்டு எடுப்பவர்களை மட்டுமே தாக்கும். ஸ்டீராய்டுகளை எடுப்பதால் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இவை நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைத்து விடுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பூஞ்சை எளிதிலும் நுழையும். அது போல் அதிகமாக ஆக்ஸிஜன் கொடுப்பது உள்ளிட்டோருக்கு இந்த நோய் தாக்க வாய்ப்புண்டு. அதனால்தான் சொல்கிறேன். முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்.