புத்ராஜெயா-
இந்தியாவில் இருந்து வந்த உருமாறிய கோவிட்-19 தொற்றின் (பி.1.617.2) புதிய மூன்று சம்பவங்களை மலேசிய சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அனைத்துலக எல்லை நுழைவாயிலின் வாயிலாக இரு அந்நியப் பிரஜைகளுக்கு இந்த வகை தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவருக்கு அறிகுறி தென்பட்டதை அடுத்து மருத்துவப் பரசோதனை மேற்கொண்டதில் இந்த வகை தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்கள் மூவரும் முன்னதாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்வழி நம் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த உருமாறிய தொற்றுப் பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நபர்கள் 14 நாட்கள் கட்டாய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வரும் அந்நியப் பிரஜைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.