ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மலேசியா நிராகரிப்பா? மறுக்கிறது என்.எஸ்.சி.

கோலாலம்பூர்: டோக்கியோ ஒலிம்பிக்கில் மலேசியா பங்கேற்பது நிராகரிக்கப்பட்டதாக டூவிட்டர் பதிவின் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஆனால் அது உண்மை இல்லை என்று தேசிய விளையாட்டு கவுன்சில் (என்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

இது போலி செய்தி. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மலேசிய அணி நிச்சயம் பங்கேற்கும் என்று என்எஸ்சி நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் ஒலிம்பிக் கவுன்சில் (OCM) தனது டுவீட்டர் கணக்கில் செய்தியை மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

“WTwt_PutrajayaWP இன் அறிக்கை உண்மையல்ல” என்று OCM டூவிட்  செய்தது.

முன்னதாக, டூவிட்டர் கணக்கிலிருந்து wTwt_PutrajayaWP இன் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி ஒலிம்பிக்கில் மலேசியாவின் பங்கேற்பை டோக்கியோ நிராகரித்ததாகக் கூறி வைரலாகி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரையிலும், பாராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரையிலும் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here