வாழ்த்துக்கள்டா பிறந்த நாள் வாழ்த்து

உயிர்த் தோழன் பாரதிராஜா

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 78 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாரதி ராஜா இயக்கிய முதல் படமான 16வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் ரயில், நிழல்கள், சிகப்பு ரோஜாக்கள், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள், டிக் டிக்டிக், மண்வாசனை, முதல்மரியாதை, புதுநெல்லு புது நாத்து, நாடோடித்தென்றல் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே இளையராஜாவும் பாரதிராஜாவும் நண்பர்கள். இதனால் இளையராஜா மீது கொண்ட நெருக்கமான நட்பினால், வாடா போடா என்று பாரதிராஜா அழைப்பது வழக்கம். 

பொதுவெளியில் இப்படி வாடா போடா என்று பாரதிராஜா அழைப்பதற்கு இளையராஜா வருத்தப்பட்டதும் உண்டு.

அதற்காக பாரதிராஜா தனது இயல்பை மாற்றிக்கொள்ள விரும்பாதவர். இன்றைக்கு அவர் விடுத்திருக்கும் வாழ்த்து செய்தியிலும் அது தெரிகிறது.

வாடா போடா என்று பாட்டெழுதினால் அதற்கும்  இசை உருவாகிவிடும்.  வைரமுத்து வேறு சோகத்தில் இருக்கிறாரே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here