சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் ஜானுவாக நடித்த மோனிஷா, தற்போது மறுபடியும் சீரியலில் நடிக்கப்ப்போகிறார் என்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசமான செய்தியாகும்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் தொடர் நாடகங்களில், அதிக டிஆர்பி ரேட்டிங்கில் இருந்த தொடரான “அரண்மனைக் கிளி” தொடரில் ஜானு கதாபாத்திரமாகவே மாறி நடித்த மோனிசாவிற்கு ரசிகர்களுக்கு குறைவில்லை.
ஊரடங்கு காலத்தில் சொந்த ஊரான கேரளாவிற்க்கு சென்றவர், மறுபடியும் சென்னைக்கு வரமுடியாது போகவும் அவரால் இந்த சீரியலில் தொடர முடியவில்லை.
ஆனால் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
“பூவே பூச்சூடவா” என்ற தொடரில் புது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.