கோலாலம்பூர் (ஜூன் 7) : மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா தமது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
அவர் ஆரோக்கியமாக நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருளாசி கிடைக்கவேண்டுவதுடன் அவருக்கு மக்கள் ஓசை பிறந்தநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மாமன்னரின் பிறந்தநாளான இன்று மலேசியாவில் பொது விடுமுறை அனுசரிக்கப்பட்டாலும், பிறந்தநாள் கொண்டாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரண்மனை அறிவித்துள்ளது.