கர்ப்பிணி மனைவியை அடித்து கோமா நிலைக்கு தள்ளிய கணவர் கைது

ஜோகூர் பாரு:  தனது கர்ப்பிணி மனைவியை அடித்து உதைத்து கோமா நிலைக்கு தள்ளிய கணவர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான நபர் கோலாலம்பூரில் உள்ள தாமான் புக்கிட் அங்க்சானாவில் நேற்று (ஜூன் 11)  கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு தெற்கு ஒ.சி.பி.டி உதவி ஆணையர் முகமட் பாட்ஸ்லி முகமட் ஜெய்ன் தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325 இன் கீழ் ஜோகூர் பாரு தெற்கு காவல்துறையின் குற்றவியல் விசாரணைத் துறையின் விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டுள்ளது  என்று ஏசிபி முகமட் பாட்ஸ்லி கூறினார். அவர் சனிக்கிழமை (ஜூன் 12) ஒரு அறிக்கையில், சந்தேகநபர் ஜூன் 12 முதல் ஆறு நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்படுவார் என்று கூறினார்.

நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் 43 வயதான மனைவியை பலத்த காயங்களுக்கு உள்ளாகி, மே 4ஆம் தேதி முதல் கோமா நிலையில் இருக்கிறார். மே 18 அன்று, சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் அவ்வாடவரின்  புகைப்படத்தை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here