உலகத்தில் – போராட்டம் என்பது புதிதல்ல!

 

போராட்டம் என்பது உலக வரலாற்றில் புதுமையானதல்ல. போராட்டங்கள் என்பது தொன்றுதொட்டு நடந்துவருகின்றன. இவற்றுக்கெல்லாம் நிறைய ஆதாரங்களும் இருக்கின்றன. 

உலகில்  நிகழந்த  பல போராட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றன என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. இன்றைய உலகத் தலைவர்களாக மதிக்கப்படுகின்ற பலர், போராட்டங்களின் வழிதான் மக்களுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

இவர்களில் மிகச்சிறந்த போராட்டவாதியாக உலக அளவில் போற்றப்படுகின்றவராக மகாத்மா காந்தி இன்றளவும் விளங்குகின்றார்.

போராட்டம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்தான் அகராதியாக இருக்கிறார். அவரின் வழிமுறைகள்தாம் உணமையான போராட்டமாக மதிக்கப்படுகிறது. அவரின் போராட்டம் ரத்தம் சிந்தாத போராட்டம். ஒரே கல்லில் ஒன்பது மாங்காய்களை வீழ்த்தும்  போராட்டம் அது. 

மனித நேயம் தொடங்கி, நாட்டின் நலன் காக்கும் போராட்டங்களால் அவரின் விடாப்பிடிகள் இருந்தன. அதற்காகக் கிடைத்த பரிசும், அந்நேரத்தில் கூட கொலையாளியை மன்னித்துவிடுங்கள் என்பதும் அவரைத்தவிர வேறு யாராலும்  செய்ய முடியாத காரியம். அதனால் அவர் மகாத்மா.

ஒவ்வொரு நாட்டிலும் போராட்டங்களுக்கு சட்டத்தின் அடைப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. போராட்டம் என்பது தவறானது அல்ல. இப்போதெல்லாம் பெரும்பாலான போராட்டங்கள் சட்டத்திற்குள் அடங்காமல்தான் வேலிதாண்டிவிடுகின்றன.

அரசாங்கத்தின் மீதான அணுகலையும் போராட்டங்கள் மூலம் கையாள முடியும். இதற்கும் சட்ட அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்தம் நடத்த, பெருகூட்டத்தைக்கூட்டி  கொள்கைகளைக் கூற, சட்டத்தின் அடிப்படையில் அனுமதியிருக்கிறது. அந்த அனுமதியை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

இதற்கான வழிமுறைகளை தவறாகக்  கையாளும்போதுதான்  விவகாரங்கள் விகாரங்களாகிவிடுகின்றன.  உணர்ச்சித் தர்க்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதன்போது, அது நியாயமாக இருப்பதுபோல் தோன்றினாலும் அது நியாயமானதா என்பதில்தான் கேள்விகள் எழுகின்றன. சட்டங்கள் தன் ஆளுமைக்குத் தள்ளப்படுகின்றன. 

பெருங்கூட்டத்தைத் திரட்டுவதால் மட்டும் வெற்றி நிலை அடையப் பெற்றதாகவும் கருதிவிடவும் முடியாது. போராட்டம் ஏன் ? எதற்காக ? அதன் அவசியத்தன்மை என்ன? அதனால் யாருக்கு நன்மை ? அந்த நன்மை பொதுமையானதா? பாதிக்கப்படும் தரப்பு எது? என்றெல்லாம் கேள்விகள் குவிந்துவிடும்.

இதற்கெல்லாம் நியாமான அணுகல்முறை கையாளபட்டு, தோல்வி காணப்பட்டிருக்கிறதா என்ற வகையில்தான் போராட்டங்கள் இடம்பெறவேண்டும்.

முறைய்யிடுதலுக்கு முறையான பதில் இல்லை என்பதன் மாற்று நடவடிக்கைதான் போராட்டமாக மாறவேண்டும். அதற்கும் ஒழுங்கு என்ற சட்டம் இருக்கிறது.  அதற்கு அரசு தரப்பில்  பாதுகாப்பும் கிடைக்கும்.

விருப்பம்போல் போராட்டம் என்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இதுபோல் அனுமதிபெறாமல் நிகழ்வுறும்  போராட்டங்களில் நடவடிக்கை நிச்சயம் உண்டு. அதையும் மீறினால் ஏற்படும் விபரீதங்கள் அதிகமாகிவிடும். பொது சொத்துகள் பாழாகிவிடும். மனித உயிர்கள் பறிபோவதற்கும் வழி வகுத்துவிடும். இதனாலும் காவல் துறையினர் முன்கூட்டியே மறுப்பும் தெரிவிப்பர்.

இன்று உலகக் கவனத்தை ஈர்த்துவரும் இந்தியாவின் விவசாயிகள் போராட்டம் அப்படித்தான் இருக்கிறது. போராட்டத்தின் கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகளிடையே தீவிரவாதமும் கலந்திருக்கிறது. தீவிரவாதத்திற்கு காரணம் விவசாயிகள் அல்லர் என்பதும் பலருக்குத்தெரியும்.

ஊடுருவல் வாதம் தலைதூக்கியிருப்பதுதான் இன்றைய மோசமான நிலைமைக்குக் காரணம். முறையற்ற செயலுக்கு எந்த அரசாங்கமும் அடிபணிந்துவிடாது .

மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளின்  நலனுக்கு குந்தகம் இன்றிப் பேச்சு வார்த்தையின்மூலம் சரிசெய்ய முடியும். அதற்குத் தடையாகத் தீய சக்திகளின் ஆதிக்கம்  மேலோங்கியிருப்பதால் எதையும் பேச்சித்தீர்க்க முடியாமல் 70 நாட்களைத் தாண்டிக்கொண்டிருக்கிறது போராட்டம்.

இரண்டு மாத்தத்திற்குமேல் போர்ராட்டம் என்றால் விவசாயம் பாதிக்கப்படுமே! உணவுப்பொருட்களின் விலை ஏறிவிடுமே என்று பார்த்தாலும் பாதிக்கப்படுவதில் கூட விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள்.

இப்படி நடப்பது ஒரு நாட்டிற்கு அழகானதல்ல, ஆனாலும் விட்டுகொடுக்கும் தரப்பு மக்கள் தரப்பாக இருந்தல்தான் நடுநிலைப்பேச்சு சாதகமாக இருக்கும்! அப்படி நடக்காதபோது. பயனில்லாமல்தான் போகும்.

விவசாயிகள் போர்வையில் தீய சக்திகளின் ஊடுருவல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறும் தரப்புகளும், விவசாயிகளின் போராட்டத்திற்குப் பரிந்துபேசும் குழுக்களும் பொது நன்மைக்காகவே  பேசி வருகின்றனயீதன் கருப்பொருள் விவசாயம் என்பதும் நன்கு விளங்கும்.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினர் அளவோடு, அவரவர் எல்லையறிந்து செயல்படுவதும் தவறல்ல. ஆர்வக்கோளாற்றினால் கூறும் போது  பல நாட்டுத்தலைவர்கள்  கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் உண்மை அறிந்து பேசுவது நாட்டு நலத்திற்கு நல்லதுதானே!

குறிப்பாக பரமசிவன் கழுத்தில் இருக்குமே , அதுபோல இருந்தால் நல்லது என்றும் ஒரு வார்த்தைக்குச் சொல்லி வைக்கலாம்.

இந்த நேரத்தில் மகாத்மா காந்தி இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தால்  என்ன செய்திருப்பார் என்று சிந்திக்கத்தோன்றுகிறது.

ரத்தம் சிந்தாத, உயிர்ப்பலி இல்லாத, ஆர்ப்பாட்டம் இல்லாத போராட்டமாக  ஆகியிருக்கும் என்று  தோன்றுகிறது. ஏனென்றால் காந்தியின் அர்சியல் போராட்டம் உலகமயமானது. அவரின் போராட்டம் உலகதிற்கானது என்பதால் விவசாயிகளின் தலையெழுத்தே மாறியிருக்கும்.

உலகில் விவசாயம் இல்லாமல் ஏதுமில்லை. உண்மையான் விவசாயமும். விவசாயிகளின் போராட்டமும் வெற்றிபெறுவதுதானே நியாயமாக இருக்கவேண்டும்!

                                                                                                                                                                                                                                                               சிற்பியன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here