மன நல ஆய்வு என்ன சொல்கிறது

கொரோனா தொற்றால்  பாதிப்பு யாருக்கு

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். கோவிட் தொற்றுநோய் பரவல் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் மட்டுமல்லாமல், பொருளாதார இழப்பு, வேலை இழப்பு ஆகியவை காரணமாக, மக்கள் நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைவது குறித்து கவலைப்படுவதும், வீட்டில் லாக்டவுன்  காரணமாக அடைந்து கிடப்பதாலும், மன அழுத்தம் பதற்றம் அதிகரித்துள்ளது. தங்கள் நண்பர்கள் , உறவினர்களை நினைத்த போது பார்க்க, சந்திகக் முடிவதில்லை. இதன் காரணமாக இளைஞர்கள் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தி லான்செட்டில் வெளியான அறிக்கை

கோவிட்-19  தொற்றுநோய் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அதிலும் இளம் பருவப் பெண்களில் மன அழுத்தம் அதிகமாக இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், 59000 பேர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில், இந்த ஆய்வில், இளைஞர்கள் எப்படி உணர்கிறார்கள், அவர்கள் மது அருந்துகிறார்களா என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவில், இளம்பருவ பிரிவினர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

கொரோனா தொற்று நெருக்கடி நிலவும் இந்த கால கட்டத்தில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க விரும்பினால், உங்கள் அன்றாட வழக்கத்தை எப்போதும் போல் பின்பற்றுங்கள் என WHO அறிவுறுத்தியுள்ளது.

தினமும் எப்போதும் போல், சரியான நேரத்தில் தூங்கவும், சரியான நேரத்தில் விழித்து எழவும், சீரான உணவை உண்ணவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு சில உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். செய்தி , டிவி சேனல்கள் போன்றவற்றை குறைவாக பாருங்கள். ஏனென்றால் கொரோனா செய்திகள் அதிகமாக வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பான முறையில், மகிழ்ச்சியாக நேரத்தை அனுபவித்து, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here