குழந்தைக்கு மதுபானத்தை குடிக்க வைக்கும் ஆடவர்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

ஜார்ஜ் டவுன்: ஒரு குழந்தைக்கு மதுபானத்தை குடிக்க வைக்கும் ஒரு காணெளி தொடர்பாக மலேசிய  மதுபான எதிர்ப்பு இயக்கம் (எம்.ஏ.சி.எல்.எம்) தலைவர் டேவிட் மார்ஷல் இன்று பிற்பகல் பிறை காவல் நிலையத்தில் ஒரு போலீஸ் அறிக்கையை பதிவு செய்தார்.

இன்று காலை வீடியோவைப் பெற்ற மார்ஷல், தெலுக் பஹாங்கில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக நம்புவதாகக் கூறினார். இன்று காலை வீடியோவைப் பெற்ற பிறகு, உடனடியாக ஒரு அறிக்கையை பதிவு செய்ய நான் பிறை காவல் நிலையத்திற்குச் சென்றேன். சட்டத்தின் விதிகளின்படி காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

இதுபோன்ற இழிவான செயல்கள் எல்லா விலையிலும் நிறுத்தப்பட வேண்டும். குழந்தையை அவ்வாடவரிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். அமைச்சகம் விரைவில் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

30 விநாடிகள் கொண்ட வீடியோவில், அடையாளம் தெரியாத ஒருவர் குறைந்தது இரண்டு முறையாவது கேனில் இருந்து நேராக குழந்தைக்கு குடிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here