பெட்டாலிங் ஜெயா ( ஜூன் 25) :
கடந்த 24 மணி நேரத்தில் 5,780 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 82 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தலைமை அதிகாரி டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 6,775 பேர் இந் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக நோயிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 657,739 ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை இப்போது 722,659 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .
தற்போது 60,117 பேருக்கு இத்தொற்றுள்ளது என்றும் 870 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர், 433 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 82 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் நடந்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,803 ஆக உயர்ந்துள்ளன.
மேலும் சிலாங்கூரில் 2,187 பேர் இன்று புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவற்றில் 1,017 பேர் 237 கோவிட் -19 கொத்தாணிகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (658), சரவாக் (673), ஜோகூர் (196), கோலாலம்பூர் (771), பேராக் (120), கிளந்தான் (135), கெடா (186), சபா (156), லாபுவான்(123) , பினாங்கு (270), மலாக்கா (223), திரெங்கானு (46), பஹாங் (139), புத்ராஜெயா (14).
பெர்லிஸில் எந்தவொரு புதிய தொற்றும் இன்றைய தினத்தில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று மேலும் அவர் கூறினார்.