பிரசார பாணிக் கூட்டத்தில் டிரம்ப்

 மீண்டும் விக்கிரமாதித்தன்…

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக ஒஹையோ மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பாணிக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அவா் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தனக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக, ஏற்கெனவே கூறிய நிரூபிக்கப்படாத தனது கருத்தை மீண்டும் வெளிப்படுத்திய அவா், அதிபா் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய ஜனநாயகக் கட்சி அரசு மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

மீண்டும் வேதாளம் முருங்கை  ஏறி விக்கிரமாதித்தன் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறது  என்றால் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிறார் ட்ரம்ப் என்றுதானே அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here