காஜாங்: SILK நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் கீழ் இன்று (ஜூன் 28) காலை ஒரு ஆடவரின் சடலம் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டது. இறந்தவர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் அறிகுறிகளின் வலியைத் தாங்க முடியாது என்று புகார் அளித்திருந்தார்.
பாலாகோங்கில் உள்ள தாமான் இம்பியான் ஏசான் அருகே பாதசாரி மேம்பாலத்தில் இருந்து சடலம் தொங்குவதைக் கண்ட பொது உறுப்பினரிடமிருந்து காலை 7.47 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக கஜாங் ஓ.சி.பி.டி உதவி ஆணையர் முகமட் ஜைத் ஹசான் தெரிவித்தார். விசாரணையில் அந்த நபர் 56 வயதான உள்ளூர் என அடையாளம் காணப்பட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மேற்கொண்ட சோதனைகளில் பாதிக்கப்பட்டவர் கோவிட் -9 நேர்மறை என்று சந்தேகிக்கப்படுவது தெரியவந்தது. இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசக் கஷ்டங்கள் போன்ற அனுபவங்களை தன்னால் எடுத்து கொள்ள முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத் தலைவர் சுல்பிகர் ஜாஃபர் அவர்கள் ஒரு தீயணைப்பு இயந்திரத்தையும் பத்து பணியாளர்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம் என்றார். உடலை மீட்க எங்கள் பணியாளர்கள் அழைக்கப்பட்டனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக உடலை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்தோம் என்று அவர் கூறினார். சடலம் பிரேத பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி.முகமட் ஸைத் தெரிவித்தார்.
மனசோர்வாக இருந்தாலோ அல்லது ஆறுதல் தேவைப்பட்டாலோ 03-7627 2929 என்ற எண்ணில் நண்பர்களை அழைக்கலாம் அல்லது www.befrienders.org.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.



















