குழந்தையின் விலை 40 லட்சம்தான்

அரசு அனுமதியுடன்  விற்பனை !!

திருமணத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் இல்லாமல் எராளமான தம்பதியர் உள்ளனர். உலகம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. எனினும் தற்போதைய நவீன காலத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற சூழலும் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பலருக்கு குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இப்படியான சூழலில் உலகின் பெரும்பாலான தம்பதிகள் உக்ரைன் நாட்டிற்கு படையெடுகின்றனர். இது என்ன புதுகதையாக இருக்கிறது என குழப்பம் வேண்டாம். அதாவது, உலகில் வாடகைத்தாய் முறையை சட்டப்படி அனுமதித்திருக்கும் சில நாடுகளில் ஒன்று உக்ரைன்.

இங்கு ஆண்டிற்கு 2500 முதல் 3000 குழந்தைகள் வெளிநாட்டினருக்காக வாடகைத்தாய் முறையில் பெற்று கொடுக்கப்படுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. அதில் 3 இல் ஒரு பங்கு சீனர்கள் தான் அதிகமாக வாடகைத்தாய் தேடி உக்ரைனிற்கு வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் வேறு வேறு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லாதவர்களுக்காக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை சட்டப்படி அனுமதிக்கப்பட்டது.

இதற்கான வாடகையாக சுமார் 25 ஆயிரம் முதல் 70 ஆயிரம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ22 முதல் 61 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

இதில் குழந்தை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்பதற்கு தனி கட்டணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முயற்சிக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு முயற்சி செய்யப்படும் அந்த இரு முயற்சியில் ஏதோ ஒரு முயற்சியில் அவர்கள் விருப்பியது போல ஆணோ பெண்ணோ வந்துவிட்டால் அதற்கு 49,900 யூரோக்கள் கட்டணம், அதுவே தான் விரும்பி குழந்தை வரும் வரை முயன்று பார்க்க 64,900 யூரோக்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த வர்த்தகம் பெரும்பாலும் பேஸ்புக் க்ரூப்களில் நடக்கிறது. அவர்கள் சுமார் 40 ஆயிரம் யூரோக்களுக்கு இந்திய மதிப்பில் சராசரியாக ரூ40 லட்சத்தில் வாடகைத்தாய் அல்லது கர்ப்பப் பை தானம் வரை பேரம் பேசி வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குழந்தைக்கு கியாரண்டி எல்லாம் கொடுத்து ஆட்களை பிடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here