வெள்ளைக் கொடிகளை அசைத்த ஒரு மணி நேரத்திற்குள் நாலாபுறமும் குவிந்த உதவிகள்

A man waving a white flag at his flat in Puchong. The white flag waving campaign is hoped the help people who need help during the MC0.3.0. (June 29,2021) — AZHAR MAHFOF/The Star

சிரம்பான், (ஜூலை) :- வீட்டின் முன் வெள்ளைக் கொடியை அசைத்த ஒரு மணி நேரத்திற்குள், புக்கிட் தெம்போக்கில் உள்ள நான்கு குடும்பங்களுக்கு உடனடி உதவி கிடைத்துள்ளது.

வெள்ளைகொடியை பறக்கவிட்ட நான்கு குடும்பங்களுக்கும் நெகிரி செம்பிலான் பெண்கள், குடும்ப மற்றும் நல விவகார எஸ்கோ மற்றும் நிக்கோல் டான் லீ கூன் ஆகியோர் இவர்களுக்கு உதவும் பொருட்டு, விரைவான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

உணவுத் தேவையுள்ள குடும்பத்தினர் தங்கள் வீட்டின் முன் ஒரு வெள்ளைக் கொடியை பறக்க விட்டதன் பின், இந்த விவகாரம் குறித்து தான் தெரிந்து கொண்டதாக மாநில சட்டமன்ற பெண்மணி (ADUN) நிக்கோல் கூறினார்.

“இந்த வெள்ளைக்கொடி பறக்க விட்டுள்ள தகவல் கிடைத்தவுடன், உடனடியாக குடும்பத்திற்கு உணவு கூடைகளை விநியோகிக்க கம்போங் புக்கிட் தெம்போக்கின் சமூகத் தலைவர் T. தீனாவை தொடர்பு கொண்டேன்” என்றும் அவர் கூறினார்.

மேலும் “ஒரு மணி நேரத்திற்குள், அங்குள்ள சமூகத் தலைவரது உதவியுடன் உணவு தேவைப்படும் குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக சமையலறை பொருட்களை வாங்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

“நான் நாசி லெமாக் மற்றும் மீஹூன் போன்ற துரித உணவுகளையும் அத்துடன் அவர்களுக்கு முகக்கவசங்களையும் நன்கொடையாக வழங்கினேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) 3.0 நடைமுறைக்கு வந்ததிலிருந்து , பெரும்பான்மையான குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகவும் நிக்கோல் கூறினார்.

“உதவி தேவைப்படும் நபர்கள் வெள்ளைக் கொடியை பறக்க விடுங்கள் அத்தோடு உதவி பெற வெட்கப்பட வேண்டாம் என்றும் வெள்ளைக் கொடியை பறக்கவிடும் எவரையும் அறிந்த அயலவர்கள் அல்லது உறவினர்கள் எங்களுக்குத் தெரிவிக்கவும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் உடனடியாக உதவி செய்வார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here