பெருங்கடலிலும் தீப்பிடிக்கும் அதிசயம்!

மெக்சிகோவில்  விபத்து எப்படி நடந்தது?

உண்மையிலேயே கடல் பற்றி எரிந்த சம்பவம் மெக்சிகோ வளைகுடாவில் நடந்துள்ளது. கடலின் கீழ் எரிபொருளைக் கொண்டு செல்லும் பைப்லைனில் கசிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

மெக்சிகோ அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெமேகஸ் என்ற பெட்ரோலிய நிறுவனம், கடல் வழியே பைப் அமைத்து, அதன் மூலம் எரிபொருளை விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் எரிபொருள் பைப்பில் ஓரிடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக, எரிபொருள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்திற்கு தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், நைட்ரஜன் வாயுவைக் கொண்டு தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

கடலின் மையப் பகுதியில், தண்ணீருக்குள் இருந்து தீப்பற்றி எரியும் இந்த அரிய காட்சி, சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடலில்கூட இவ்வாறு தீ விபத்து ஏற்படும் என்பதை நம்பவே முடியவில்லை என பலரும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here