புத்ராஜெயா, (ஜூலை 6) :
மரபணுமாற்றம் பெற்ற புதிய கோவிட் -19 வைரஸ் வகைகள் மலேசியாவில் இனங்காணப்பட்டுள்ளன. மொத்தமாக 584 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மிகவும் பரவலாகவும், வான்வழி மூலம் வேகமாக பரவுகின்றன என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
புதிய வைரஸ் மாறுபாடுகளால் சில நாடுகள் அச்சுறுத்தப்படுகின்றன என்ற உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையைத் தொடர்ந்து மரபணு வரிசைமுறை உட்பட டெல்டா மாறுபாட்டின் (B1617.2) அச்சுறுத்தல் குறித்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக மலேசியாவில் பல புதிய வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
“எங்கள் நாட்டில் புதிய வகைகளின் அச்சுறுத்தல்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒருங்கிணைப்பு மந்திரி கைரி ஜமாலுதீனுடன் ஒரு கூட்டு ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
பதிவு செய்யப்பட்ட 584 தொற்றுக்களில் 40 பேருக்கு டெல்தா மாறுபாட்டு வைரஸ் தொற்றும், 136 பேருக்கு பெத்தா மாறுபாட்டு வைரஸ் தொற்றும் (பி .1.351), 10 பேருக்கு அல்பா மாறுபாட்டு வைரஸ் தொற்றும் (பி 117); 2 பேருக்கு B1525 மாறுபாடு வைரஸ் சம்பந்தப்பட்ட தொற்றும், மற்றும் 4 பேருக்கு B161.7.14 இன் வைரஸ் தொற்றுக்களும் பதிவு செய்துள்ளன. மீதமுள்ள 392 வழக்குகள் (VOC) வகைகளை உள்ளடக்கியுள்ளது.
இம்மாறுபாடுடைய வைரஸ் தொற்றுக்கள் விரைவாக பரவி இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதனால் அப்பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ள சம்பவ விகிதங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சகம் பல்வேறு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஆதாம் கூறினார்.
“நாங்கள் ஒரு மரபணு வரிசையை உருவாக்குவோம், அங்கிருந்து ஒரு நபர் ஒரு புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை நாங்கள் அறிவோம், ”என்று அவர் கூறினார்.
மேலும் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் போட்டுக்கொள்வதன் மூலமாக இப்புதிய வகைகளுக்கு எதிரான நோய்த்தடுப்பினை பெற முடியும் என்றும் கோவிட் -19 தடுப்பூசித்திட்டத்தில் இந்த மாறுபாட்டு வைரஸுக்கு எதிரான நிதி ஒதுக்கீடு இன்னும் பாவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மைசெஜாத்திரா விண்ணப்பத்தில் மொத்தம் 18.6 ஆயிரம் பதில்களில் 1,000 பதில்கள் தடுப்பூசியின் பக்க விளைவு தொடர்பானது என்றும் பொதுவாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை பக்க விளைவுகளாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













