இத்தாலியின் அபார கோல் கீப்பர்

கால்பந்து தொடரின் சிறந்த நாயகன் டோனரூமா !
ஐரோப்பிய சாம்பியன் இத்தாலியின் ஜெயண்ட் கோல் கீப்பர் கியான்லுகி டோனரூமா யூரோ 2020 கால்பந்து தொடரின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெம்பிலியில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்று இத்தாலி வீழ்த்தி கோப்பையை வென்றது. இங்கிலாந்தின் 2 கோல்களை டோனரூமா தடுத்ததுதான் இத்தாலியின் வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஜேடன் சாங்கோ,புகாயோ சாக்கோ ஆகியோரது பெனால்டி ஷூட் அவுட்டில் அடித்த ஷாட்களை தடுத்தது இத்தாலியின் வெற்றியை உறுதி செய்தது.

யூரோ 2020 தொடரில் டோனரூமா 4 கோல்களைத்தான் விட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மத்தியாஸ் சாமர், 2000- இன் பிரான்ஸின் ஜினடைன் ஜிடேன், க்ரீஸ் வீரர் தியோடோரஸ் சாகோராகிஸ், ஸ்பெயினின் சாவி, 2012- இல் ஆண்ட்ரியாஸ் இனியெஸ்டா, 2016- இல் ஆண்டானியோ கிரேஸ்மேன் ஆகியோர் மதிப்பு மிக்க வீரர்களாக தொடர் நாயகன் விருது வென்றனர்.

இப்போது டோனரூமா தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here