பினாங்கில் வீழ்ச்சியடையும் குற்ற விகிதம் மாறாக அதிகரிக்கும் குடும்ப வன்முறை .

ஜார்ஜ் டவுன், ஜூலை 15 :

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி பினாங்கு நகரில் மொத்தம் 239 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் கமிஷனர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 177 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 62 வழக்குகள் அதிகரித்துள்ளது என்று முகமட் சுஹைலி கூறினார்.

“குடும்ப வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் என்றும் மேலும் இப்பொழுது தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தமே இந்த அதிகரிப்பதற்கான காரணம்” என்றும் அவர் கூறினார்.

மேலும் குடும்பவன்முறை அதிகரிப்பதற்கு காரணங்களில் தவறான புரிதல், போதைப்பொருள் செல்வாக்கு, நிதி மற்றும் குழந்தைகள் பிரச்சினைகள், பொறாமை, மனச்சோர்வு மற்றும் போதையில் இருப்பது போன்றவையும் அடங்கும் என்றும் முகமட் சுஹைலி கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பினாங்கு மொத்தம் 1,623 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் மாநிலத்தில் குற்ற விகிதம் குறைந்துள்ளது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் வழக்குகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 2,084 ஆக இருந்த எண்ணிக்கை 461 வழக்குகளால் அல்லது 22.1% குறைந்துள்ளதாகக் கூறினார்.

“இருப்பினும், பினாங்கு மாநிலத்தில் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாதங்களுக்கு இடையில் மொத்தம் 768 வழக்குகள் பதிவாகியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here