துஷ்பிரயோக வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் கைது

 பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார்!

கனடா:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு துஷ்பிரயோக வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபரை Chilliwack போலிசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுமார் 11 துஷ்பிரயோக வழக்குகளில் தேடப்பட்டு வந்த 28 வயதான Joel Eric Carlson என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். காம்லூப்ஸ் பகுதியில் முன்னர் குடியிருந்து வந்த இவர் மீது துஷ்பிரயோக வழக்குகள் பதிவான நிலையில் 2020 செப்டம்பர் மாதம் கைதானார்.


தொடர்ந்து இவர் மீதான புகார்கள் பாதிக்கப்பட்டவர்களால் தாமாகவே முன்வந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் Chilliwack போலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான அன்றே நீதிமன்றத்திலும் சமர்ப்பித்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்யப்படும் என போலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here