கோவிட்-19 தொற்றுக்கு பின் வரும் உடல்நல பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனா அல்லது கோவிட்-19 லிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவகும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் தாக்கம் உடல் அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் நிலையில், அத்தொற்றில் இருந்து மீண்ட பிறகு எழும் பிரச்னைகள் எண்ணில் அடங்காவையாக உள்ளன.

கோவிட் தொற்றினில் இருந்து  மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் ஆனால் இது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “இம்மாதிரியான நீண்ட கால கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் நீள்கிறது என எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள இதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here