பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 வியட்நாமிய பெண்கள் உட்பட 11 பேர் கைது; SOP யை மீறுவோர் யாராயினும் கைது தொடரும் என்கிறது போலீஸ்

பட்டர்வொர்த்: நேற்றிரவு ஜாலான் லெஸ்தாரி அருகே உள்ள ஒரு சொகுசுமாடிக்குடியிருப்பில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 வியட்நாமினிய பெண்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூன்று பெண்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறித்த சொகுசுமாடிக்குடியிருப்பின் 19 வது மாடியிலுள்ள அவர்களது வீட்டிலிருந்து மிக பெரிய சத்தம் எழுப்பப்பட்டதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில் போலீசாரினால் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கு மாநில குற்றப் புலனாய்வுத் துறை தலைமை துணை ஆணையர் ரஹிமி ராயிஸ் கூறுகையில், ஆரம்ப விசாரணையில் குறித்த 19 ஆவது மாடியின் வீட்டு பிரிவு (unit) இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு அந்த வீட்டை வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. அதில் இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் காதலர்கள்.

“குறித்த யூனிட்டிலிருந்து உரத்த சத்தங்கள் வந்ததாக புகார்களைப் பெற்ற பிறகு, நாங்கள் அவ்வளாகத்தை சோதனையிட்டோம், சோதனைகளின் போது, ​​அவர்கள் பிறந்தநாள் கேக்கை வெட்டி முடித்துவிட்டு உரத்த இசையுடன் பார்ட்டி செய்துகொண்டிருப்பதைக் கண்டோம்”.

“தனது 22 வயது பெண் நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வீட்டு பிரிவை வாடகைக்கு எடுத்த ஒருவர் இப் பிறந்தநாள் விழாவை நடத்தினார். பின்னர் அவர் தனது ஏழு நண்பர்களை தொடர்பு கொண்டு, விருந்திற்கு அழைத்தார்,” என்று அவர் கூறினார்.

மேலதிக விசாரணையில், இந்த பிரிவை வாடகைக்கு எடுத்த இரண்டு ஆண்கள் மூன்று வியட்நாமிய பெண்களுடன் பொழுதுபோக்கு மையங்களுக்குச் சென்றதில் அறிமுகமாகி நட்பாக இருந்தனர் என்றும் அதன் பின்னரே இரு ஜோடிகளும் காதலித்ததாகவும் பின்னர் குறித்த வீட்டுப்பிரிவை மாதத்திற்கு 1,450 வெள்ளிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தொழிற்சாலைகள், செல்லப்பிராணி கடைகள் மற்றும் உறைந்த பொருட்களின் தொழிலில் வேலை செய்வதாகவும் கூறினார்.

சோதனையின் போது அவர்களின் வீட்டுப்பகுதியில் போதை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

“இருப்பினும், ஒரு வியட்நாமிய பெண் உட்பட ஆறு ஆண்களின் சிறுநீர் சோதனைகள் மெட்டாபெடமைனுக்கு (methaphetamine) சாதகமான பதிலை பதிவு கொண்டிருந்தனர் “ என்று அவர் கூறினார்.

மேலும் போலீசார் ஒலி எழுப்பும் இயந்திரங்கள், பலூன்கள் மற்றும் பிற பிறந்தநாள் அலங்காரங்களை பறிமுதல் செய்தனர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 269 மற்றும் ஆபத்தான மருந்து சட்டம் 1952 பிரிவு 15 (1) ன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 11 பேரும் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரஹிமி கூறினார்.

“கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நிலையான இயக்க நடைமுறைகளை மீறும் எவருடனும் நாங்கள் சமரசம் செய்யமாட்டோம். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தொடர்ந்து தகவல் தருமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம், எனவே தான் நாம் அதன்படி செயல்பட முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here