கோலாலம்பூர்: தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் (PICK), கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்டு 9) நிலவரப்படி மொத்தம் 25,008,230 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார்.

மொத்தத்தில், 15,959,596 நபர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர், 9,048,634 பேர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

“விழுக்காட்டின் அடிப்படையில், நாட்டின் மக்கள்தொகையில் 68 விழுக்காடு (68%) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 38.7 விழுக்காடு (38.7%) தடுப்பூசியின் இரண்டு டோஸை பெற்றுள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் டாக்டர் ஆடம் பாபா கூறுகையில், தினசரி தடுப்பூசி விகிதத்தின் கீழ் கடந்த திங்களன்று 465,793 டோஸ் வழங்கப்பட்டதாகவும் அதில் 187,495 முதல் டோஸ் என்றும் 278,298 இரண்டாவது டோஸ் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த PICK பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here