14 வயது மருமகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் மேல்முறையீட்டை ஏற்றது நீதிமன்றம்

புத்ர ஜெயா: இரண்டு வருடங்களுக்கு முன்பு பெசூட் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் 14 வயது மருமகளுடன் இரண்டு முறை உடலுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட புல் வெட்டும் நபர் ஒருவர், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை நீதிமன்றம் இன்று (ஆகஸ்டு 16) ஓரளவு அனுமதித்தது.

அப்துல் கரீம் அப்துல் ஜாலீல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், அவருக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததுடன் பிரம்படிகளை மட்டும் 10லிருந்து 4 ஆக குறைத்தது.

“அவளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நீ அவளைப் பயன்படுத்திக் கொண்டாய்” என்று நீதிபதி கரீம் கூறினார். அவருடன் சுபாங் லியான் மற்றும் சே முகமட் ருசிமா கஜாலி ஆகிய நீதிபதிகளும் அந்த அமர்வில் இருந்தனர்.

சிறுமியை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த நபர், 2019 மே 2 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் முறையே நண்பகல் 2 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திரெங்கானுவில் உள்ள அவரது கம்போங் வீட்டில் அக் குற்றங்களைச் செய்தார்.

அவர் மே 21, 2019 அன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றத்திற்காக அவருக்கு 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகளும் மற்றும் இரண்டாவது குற்றத்திற்காக இதே போன்றே சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிறை தண்டனையை தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டார், அதாவது அவர் 30 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும். தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததை மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376B (1) ன் கீழ், யார் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் 10 வருடங்களுக்கும் குறையாத மற்றும் 30 வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் வழங்க வகை செய்கிறது.

மேலும் 50 வயதுக்கு கீழ் உள்ள ஆணுக்கு 24 முறை சவுக்கடி கொடுக்கலாம் என்றும் சட்டம் தெரிவிக்கின்றது.

மேலும் அவரது இந்த செயல் சட்டம், மதம் அல்லது வழக்கத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை, பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அசாதாரணமாக நடந்துகொள்வதை கவனித்தார். விசாரித்ததில், அந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்தார்.

குறித்த ஆசிரியர் மே 12, 2019 அன்று போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், குற்றவாளியை போலீஸ் அவரது வீட்டில் கைது செய்தது.

மேலும் பாதிக்கப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவ சான்றுகள் காட்டுகின்றன.

தனது தண்டனையை குறைக்குமாறு செய்த மேல்முறையீட்டில் குற்றத்தின் தன்மையை அடிப்படையாக கொண்டு, பிரம்படிகளை மட்டுமே மேல்நீதிமன்றம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here