கோலாலம்பூர்:
நேற்று மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மீட்பு நிவாரணப் பணிகளில் உதவ தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (நாட்மா) 10 பேர் கொண்ட குழு மியன்மாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 144 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், ஆனால் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்ப உதவி வழங்கவும், தளத் தேவைகளை மதிப்பிடவும் நட்மாவிலிருந்து ஒரு குழு இன்று மியன்மாரின் யாங்கோனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

அதேநேரம் 40 பணியாளர்கள் அடங்கிய இரண்டாவது நட்மா குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புறப்பட உள்ளது என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது





















