மனித நேயம் என்பது அனைவரிடத்திலும் இருக்கிறது. சிலரிடம் அது வெளிபடையாகக் காணப்படுவதில்லை. அதற்கான அவசியம் நேராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சிலருக்கு அது வெளிபடையான குணமாகவே இருக்கும். அதுதான் அவர்களின் இயல்பு வாழ்க்கையாகவும் அமைந்திருக்கும்.
மனிதர்களுக்கு மனிதன் செய்யும் உதவிகள் அனைத்தும் மனித நேயம் என்பார்கள். அதில் தவறு இல்லை. ஆனாலும் மனிதம் தாண்டி புனிதமாக்கும் நேயங்களும் இருக்கின்றன . பலரின் கண்களில் இந்த வகை நேயம் பட்டாலும் அது ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.
ஆனாலும், அது மனித நேயம். மிகப்பொருட்டானது என்பது சிலருக்குத்தான் உணர்வில் புரியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் சுங்கை பூலோ பண்டார் பாரு பகுதியிலுள்ள பவுசியா பாவ்ஸ் கேர் நடத்துநரான பவுசியா.
வாயற்ற ஜீவன்கள் என்று இரக்கப்படும் மனிதர்கள் மத்தியில், வாயற்ற ஜீவன்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகளே முதன்மையானது என்பதைச் செயல் அளவில் எதுத்துக்காட்டி வருகிறார் இவர்.
வழியில் சுற்றித்திரியும் ஆதரவற்ற ஜீவன்கள். அடிபட்டு நகர முடியாமல் இடர்படும் ஜீவன்கள் ஆகிவற்றுக்கு தன் சொந்த வருமானத்தில் பரமரிப்பு செய்து வருகிறார் இவர். இதனால் இவருக்கு எந்த வித ஆதாயமும் இல்லை. இருப்பதைச் செலவு செய்து கடந்த 15 வருடங்களாக இப்பராமரிப்பைச் செய்துவருகிறார் பவுசியா.
இவரின் இடம் சிறியதுதான் . பவுசியா பாவ்ஸ் கேர் என்ற பெயரில் எவ்விவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இம்மையத்தை நடத்திவரும் இவர், சில ஜீவன்களைக் கொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அறிந்து காப்பாற்றிக்கொண்டுவந்திருக்கிறார்.
இக்கால கட்டம் பொருளாதார நெருக்கடியான காலகட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் பவுசியாவின் இரக்கம் காய்ந்துவிடவில்லை. மனத்தில் ஈவு கசிகறது. கண்களில் பாசம் பரிவு பிரகாச மிடுகிறது . இப்படியிருக்க எல்லாராலும் முடியுமா? நிச்சயமாக முடியாது! ஏனெனில் அதற்கான வாய்ப்பும் வசதியும் பலரிடம் இருக்காது. இது குறை என்ற கணக்கில் சேராதுதான். ஆனாலும் அதற்குப் பிராயச்சித்தமாக பரிகாரம் இருக்கிறது. இந்த மையத்திற்கு உதவினால், அதற்கான புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பலாமே!
இப்படிச் செய்தாலும் அதன் கணக்கும் மனித நேயம்தான்.
உதவுவதில் நம்மை மிஞ்ச ஆளில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக் இருந்துவருகிறது. அதற்கு மேலும் வலுவூட்ட, நம் பங்கு இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பதை நயமாக உணர்த்துகிறார் பவுசியா.
தொற்று காலத்தில் அனைவருக்கும் சிரமம் இருக்கிறது. அத்தோடு இந்த ஜீவன்களுக்குமான சிரமத்தைப் பகிர்ந்துகொண்டால் புண்ணிய பலன்களின் மதிப்பெண்கள் உயர்ந்துவிடும்.
இருப்போர் முன்வந்து ஆதரவு கரம் நீட்டலாம். இல்லாதார் எப்போதும் இல்லாதார் அல்லர். அவர்களாலும் முடியும். எப்படி உதவலாம் என்பதை யோசிக்கலாம். பலரை அறிமுகப்படுத்தலாம். எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
நல்ல மனம் வாழ்க என்று வாயார வாழ்த்தப்படுவோர் பட்டியலில் சேர 016 281 1341 என்ற எண்ணில் அழைத்து உதவலாமே!