அரசாங்க முன்னாள் தலைமை செயலாளர் கோவிட் தொற்றினால் பலி

அரசாங்க முன்னாள் தலைமைச் செயலாளர் துன் அஹ்மத் சர்ஜி அப்துல் ஹமீத் 83 வயதில் காலமானார். இன்று ஒரு முகநூல் பதிவில், அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமது ஜுகி அலி, அகமது சர்ஜி அதிகாலை 1.40 மணியளவில் காலமானார் என்று கூறினார்.

ஆகஸ்ட் 7 அன்று, அஹ்மத் சர்ஜி கோவிட் -19 சிக்கல்களால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் செராஸில் உள்ள மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நிர்வாகத்தின் போது 1990 முதல் 1996 வரை அகமது சர்ஜி அரசாங்க தலைமைச் செயலாளராக இருந்தார்.

ஓய்வு பெற்ற பிறகு, மலேசியாவின் இஸ்லாமிய புரிதல் நிறுவனத்தின் தலைவராகவும் (IKIM) மற்றும் பெர்மொடலான் நேஷனல் பெர்ஹாட் (PNB) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here