பேராக்கில் 1,610 ஆசிரியர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை

ஈப்போ (ஆகஸ்டு 30):

பேராக்கில் உள்ள 1,610 ஆசிரியர்கள் இன்னும் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் மனித வளக் குழுத் தலைவர் அகமட் சைடி முகமட் தாவுத் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 29) நிலவரப்படி, பேராக்கில் உள்ள தேசிய ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 37,590 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுள் 36,238 ஆசிரியர்கள் ஏற்கனவே தடுப்பூசியை பெற்றுள்ளனர். அத்தோடு 1,352 ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசியை செலுத்தவில்லை. அதாவது சிலர் இன்னும் தடுப்பூசிக்கு பதிவு செய்யவில்லை என்றும் மற்றும் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்கான நியமனத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று அகமட் சைடி கூறினார் .

இன்று கூடிய மாநில சட்டசபையில் அகமட் சைடி உரையாற்றிய போது, “சிஜில் டிங்கி அகமா மலேசியா (STAM), தொழிற்கல்வி, படிவம் 5 மற்றும் 6 ஆசிரியர்கள் 9,684 பேரில் 258 ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்றும் அவர்களுள் சிலர் தடுப்பூசிக்கு பதிவுசெய்து இன்னும் தடுப்பூசி நியமனத்திற்காக காத்திருக்கிறார்கள்,” என்றும் அகமட் சைடி கூறினார் .

மேலும் மாநில அரசு இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், இந்த ஆசிரியர்களுக்கு விரைவில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை பேராக் கல்வித் துறை இரட்டிப்பாக்கும் என்றும் அகமது சைடி கூறினார்.

“தேவைப்பட்டால், ஆலோசனை அமர்வுகள், வேப் மைனர் (web minor) மற்றும் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்த பட்டறைகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நடத்திய இடர் கண்காணிப்பு மதிப்பீடு, பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் திறக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இதனால் பள்ளிகள் தயாராகும் வரை அவை மூடப்பட வேண்டும் என்றார்.

“மாநில அரசு எப்போதும் அனைவரது பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது. குறிப்பாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOPs) இணங்குவது மிகவும் அவசியம் . மேலும் “பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் அதிகபட்ச அளவில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சிறப்பு குழு அமைக்கப்பபட வேண்டும் என்றும் அகமட் சைடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here