இன்று நாட்டின் 64ஆம் ஆண்டு சுதந்திர தினம்

மூவின மக்களின் அடையாளமே ‘மலேசியா’ – சுதந்திர தினம்

பல இன மக்கள், பல மொழி தேசம், பல கலாச்சார கூறுகளை கொண்ட நாடு என்று உலக அரங்கில் தனக்கென தனி செல்வாக்கில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது ‘மலேசியா’.

ஒரே இன மக்களாக இருந்தாலும் உள்நாட்டுச் சண்டை, கலவரம், இன குழுக்களின் மோதல் என பல நாடுகளில் இன்னமும் தங்களது வாழ்வாதாரத்திற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் பல மக்களுடன் சகோதரத்துவ மாண்போடு சகிப்புத்தன்மையை வளர்த்து ஒற்றுமையை நிலைநாட்டிக் கொண்டிருப்பதே மலேசியாவின் சிறப்பம்சமாகும்.

மலேசியாவின் அடையாளமே மூவின மக்கள் தான். பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆதிக்கத்தின்போது ‘மலாயா’ என்று அன்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திர பிரகனடத்தின்போது கையெழுத்திட்ட வலராற்றுக்குரியவர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக், துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோரே ஆவர்.

இன்று 64ஆம் ஆண்டு சுதந்திர தினம். அனைத்து மலேசியர்களுக்கும் மக்கள் ஓசை சார்பாக சுதந்திர தின வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here