பகடிவதை கொலை: தூக்குத் தண்டனையை மீண்டும் கொண்டு வருவீர்

இடைநிலைப் பள்ளிகளிலும் தங்கிப் படிக்கும் பள்ளிகளிலும் நிகழும் பகடிவதைச் சம்பவங்கள் மரணத்தில் கொண்டு போய்விடுவதாக உள்ளன.

இப்போது ஒரு குறிப்பிட்ட மாணவர் கும்பலின் இந்த அடாவடி செயல் வரம்பு மீறியதாக இருக்கிறது.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனில் சாகும் வரையிலான கட்டாய மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஹென்றி கர்னி முன்னாள் மாணவர் முகமட் இஸாட் டானியால் அப்துல்லா வலியுறுத்தினார்.

கொடூரமான மூறையில் சக மாணவனுக்கு மரணம் விளைவிப்போருக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் இந்த கடுமையான தண்டனை அவசியமாகிறது.

இடைநிலைப்பள்ளிகளில், ஆசிரமப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு  கடுமையான தண்டனைகளை மீண்டும் கொண்டு வருவதற்கு காலம் கனிந்து விட்டது என்று அவர் சொன்னார்.

சபா, லாஹாட் டத்துவில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் முகமட் நஸ்மி ஐசாட் முகமட் நருல் அஸ்வான் (வயது 17) என்ற மாணவன் அவன் தங்கியிருந்த அறையில் மயங்கிக் கிடந்தான்.

16 முதல் 19 வயதிலான 13 மாணவர்கள் நஸ்மி ஐசாட்டை சுய நினைவை இழக்கும் வரை  கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் ரோஹன் ஷா அமாட் கூறினார். இக்கொடிய சம்பவம் குறித்து கருத்துரைத்த முகமட் இஸாட் அண்மையக் காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டினார்.

கூட்டம் கூட்டமாக ஒரு மாணவனை உதைத்து தாக்குவது அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது.

இவர்கள் போன்ற மனப்போக்கை கொண்டவர்களுக்கு ஒரு பயத்தை தரும் வகையில் தண்டனையும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here