சமூக ஊடகங்களின் மூலம் கஞ்சா கலந்த குக்கீகள், கேக்குகள் விற்ற தம்பதியர் கைது

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக கஞ்சா கலந்த குக்கீகள் மற்றும் கேக்குகளை விற்ற தம்பதியினரை செவ்வாய்க்கிழமை தனித்தனி சோதனைகளின் போது போலீஸ் கைது செய்தது.

நகர போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமை உதவி ஆணையர் சஹார் அப்துல் லத்தீஃப் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், செவ்வாய்க்கிழமை “ஒப் ஸ்ரோம்” என்ற குறியீட்டு பெயருடன் இந்த நடவடிக்கை செயல்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சந்தேக நபர்கள் மீது போலீஸ் கண்காணிப்பை மேற்கொண்டது என்றார்.

முதல் சந்தேக நபர் (34), மாலை 3.50 மணியளவில் ஜாலான் புடுவில் வைத்து, 53 கஞ்சா கலந்த கேக்குகள் மற்றும் 25 ஜாடி கஞ்சா கலந்த குக்கீகளுடன் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் புலனாய்வாளர்களை பிஜே மிட்டவுனில் உள்ள ஜாலான் கெமாஜுவானில் உள்ள மற்றொரு வதிவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு இருந்த அவரது 28 வயது காதலியும் அழைத்துச் செல்லப்பட்டார் “ என்றார்.

41 கஞ்சா கேக்குகள், 7.8 கிலோ எடையுள்ள எட்டு ஸ்லாப் கஞ்சா, 31 லீட்டர் திரவ கஞ்சா, அடுப்புகள் மற்றும் பேக்கிங்கிற்குப் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களைக் கொண்டதாகக் கருதப்படும் உபகரணங்கள் அடங்கலாக 131 ஜாடிகளை போலீசார் கண்டுபிடித்ததாக சாஹார் கூறினார்.

“அவர்கள் இருவரும் காதலர்கள் என்று ஆரம்ப போலீஸ் விசாரணையில் தெரியவந்தது, அவர்கள் இன்ஸ்டாகிராமில் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு இவற்றை சந்தைப்படுத்துவதன் மூலம் 100 வெள்ளிக்கு குக்கீகள் மற்றும் தலா 50 வெள்ளிக்கு கேக்குகளையும் விற்று வருகின்றனர்.

“எட்டு மாதங்களுக்கு முன்பு பெட்டாலிங் ஜெயாவில் 3,000 வெள்ளிக்கு யூனிட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக காசோலைகள் காட்டின என்றும் ஆனால் குக்கீகள் மற்றும் கேக்குகளை கடந்த ஐந்து மாதங்களாக மட்டுமே விற்று வருகின்றனர் ,” என்றும் அவர் கூறினார்.

மேலும் சிறுநீர் சோதனைகளில் ஆடவர் கஞ்சாவுக்கு சாதகமான பதிலை பெற்றார் என்றும் சாஹர் கூறினார், அதே நேரத்தில் அவரது காதலியின் சோதனை முடிவு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிர்மறையாக வந்தது.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 (கடத்தலுக்கு) பிரிவு 39B இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணைக்காக இருவரும் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

குறித்த நபர் ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவல் செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவரின் காதலி செப்டம்பர் 8 முதல் ஒரு வாரத்திற்கு தடுப்புக்காவல் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்ததைத் தொடர்ந்து இருவரிடமிருந்தும் 11,790 வெள்ளி ரொக்கம் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் 491,089 வெள்ளி மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்டதாகவும் சாஹார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here