18 மாதங்களேயான ஆண்குழந்தை ஃபெல்டா ஜெங்கா 4 ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்; SAR படையின் தேடுதல் தொடர்கிறது

குவாந்தான்: நேற்று நண்பகல் மாரான் அருகேயுள்ள சுங்கை பெல்டா ஜெங்கா 4 ஆற்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தந்தையின் காரில் இருந்து இறங்கிய, பதினெட்டு மாதங்களேயான ஓர் ஆண் குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது.

மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோர்சாம்ரி அப்துல் ரஹ்மான் இச்சம்பவம் பற்றிக் கூறியபோது, முகமட் அப்துல்லா சைபுல் பஹாரி என்ற குழந்தையே இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இருக்கையில் இருந்து காணாமல் போனதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவரை காரில் விட்டு விட்டு, காரின் கதவை திறந்து வைத்து விட்டு, சென்றதாக அவரது தந்தை கூறினார். தந்தை போய்விட்டார் என்பதை உணர்ந்தவுடன், அக்குழந்தை காரிலிருந்து இறங்கி வெளியே சென்றுள்ளது. அதே நேரம் அக்காரினுள் குழந்தையின் 6 மற்றும் 8 வயதுடைய இரு சகோதரர்களும் இருந்துள்ளனர். ஆனால் குழந்தை காரில் இருந்து இறங்கியதை அவர்கள் உணரவில்லை என்றார்.

“குழந்தையின் தந்தை அந்த ஆற்றில் ஒரு குழந்தையின் கால்தடங்கள் இருந்ததை கண்டுபிடித்ததால், அவரது மகன் அங்கு விழுந்துவிட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது” என்று எண்ணி அப்பகுதி மக்களை அவர் தொடர்பு கொண்டார்.

முக்கிய சாலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்பனை தோட்டத்திற்குள் இந்த நதி அமைந்திருப்பதாக நோர்ஸாம்ரி கூறினார்.

மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் மலேசிய தன்னார்வத் துறை சம்பந்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு பிரிவினர் (SAR) உடனடியாக சிறுவனை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர், ஆனால் வானிலை இருட்டாக இருந்ததால் இரவு 8 மணிக்கு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

“SAR படையினர் ஆறு மற்றும் அருகிலுள்ள காட்டில் பாதிக்கப்பட்டவரை கண்டறிய போலீஸ் நாய்களையும் பயன்படுத்தி தேடிவருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here