கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி தூரம் போதுமானதாக இருக்காது; புதிய ஆய்வில் முடிவு

வாஷிங்டன்: மூடப்பட்ட அறைகளில் காற்றில் மிதந்து வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க, இரு நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் (ஆறரை அடி) இடைவெளி போதுமானதாக இருக்காது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளனர். அதேசமயம் வைரசின் தன்மை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை ‘நிலையான நகரங்கள் மற்றும் சமூகம்’ என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.

ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள் மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் அல்லாமல், மூக்கு மற்றும் வாயை முறையாக மறைத்தல், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் முதல் எழுத்தாளரும் முனைவர் பட்ட மாணவருமான ஜெனரல் பெய் இது பற்றிக் கூறுகையில், “மூடப்பட்ட கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வெளியிடப்பட்ட வைரஸ் நிறைந்த துகள்களின் வான்வழிப் போக்குவரத்தை (airborne transport of virus) நாங்கள் ஆராய்ந்தோம். அதில் காற்றோட்டம் மற்றும் உடல் ரீதியான தூரத்தை உருவாக்குவதன் விளைவுவாக காற்றில் பரவும் வைரஸ்களுக்கு பூட்டப்பட்ட அறையில் பரவலடைவதை காண முடிந்தது என்றார்.

முகக்கவசம் இல்லாமல் இருக்கும் வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் பேச்சிலிருந்து வைரஸ் நிறைந்த துகள்கள் ஒரு நிமிடத்திற்குள் மற்றொருவரின் சுவாச மண்டலத்திற்கு, இரண்டு மீட்டர் தூரத்திற்கு கூட விரைவாக பயணிக்க முடியும் என்று ஆய்வு காட்டுகிறது என்றார்.

“இந்த தாக்கம் போதுமான காற்றோட்டம் இல்லாத அறைகளில் காணப்பட்டது” என்று பென் மாநிலத்தின் தொடர்புடைய எழுத்தாளரும் இணை பேராசிரியருமான டோங்யுன் ரிம் கூறினார்.

மேலும் இடப்பெயர்ச்சி காற்றோட்டம் கொண்ட அறைகளில் ஏரோசோல்கள் அதிக தூரம் மற்றும் வேகமாகப் பயணிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here