கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை விழா

கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தில் சிறப்பு ஹோமம்,  பூஜைகள் நடைபெற்று வருகிறது. இம்மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விஷேசமாகும். முதல் புரட்டாசி சனிக்கிழமை விழா எஸ்ஓபியை பின்பற்றி நடந்ததாக ஆலயத்தலைவர்  சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்.17) தொடங்கிய புரட்டாசி மாதத்தில் பலர் விரதம் மேற்கொள்ள ஆலயத்திற்கு வந்து துளசிமாலை அணிந்து சென்றனர் என்றும் அவர் கூறினார்.

 

முதல் சனிக்கிழமை புரட்டாசி பூஜையில் லோட்டஸ் குழுமத்தின் டான்ஶ்ரீ ரெனா.துரைசிங்கம், அவரின் புதல்வர் கார்த்திக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதே வேளை ஆலயத்திற்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here