புத்ராஜெயா: இளைஞர்கள் கோவிட் -19 தடுப்பூசியை நேரடியாக சென்று பெற்று கொள்ள நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 23) முதல் சுகாதார அமைச்சால் அடையாளம் காணப்பட்ட 156 பிபிவி (தடுப்பூசி மையங்கள்) இல் தொடங்குகிறது.
துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஆஸ்மி கஜாலி ஒரு அறிக்கையில், பள்ளிகள் வழங்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.









