விநியோக நிறுவன லோரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையருகில் உள்ள மரத்தில் மோதி தீப்பிடித்தது; லோரி ஓட்டுநர் மரணம்

ஜோகூர் பாரு: இன்று லார்கின், ஜாலான் தாசே உத்தாராவில், சாலையின் ஓரத்தில் இருந்த சாலைத்தடுப்புக் கூம்பைத் (cone) தவிர்க்க முயன்றதாக நம்பப்பட்ட ஒரு விநியோக நிறுவனத்தின் லோரி கட்டுப்பாட்டை மீறி சாலையருகில் மரத்தில் மோதி தீப்பிடித்தது. லோரி ஓட்டுநர் பரிதாபமாக இறந்தார்.

லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் முகமட் சுஹைமி அப்துல் ஜமால் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் 23 வயது முகமட் முஸ்தக்கிம் இஸ்மாண்டி என அடையாளம் காணப்பட்டார் என்று கூறினார்.

காலை 11.46 மணிக்கு தீயணைப்பு படைக்கு அவசர அழைப்பு வந்தவுடன் 13 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து கூறிய அவர், பாதிக்கப்பட்டவர் உட்பட குறித்த விநியோக நிறுவனத்தின் மூன்று வாகனங்களில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குவதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது என்றும் மேலும் மற்றைய இரு வாகனங்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறினார்.

“எனினும், பாதிக்கப்பட்டவர் ஓட்டி வந்த லோரி சாலையின் ஓரத்தில் இருந்த கூம்பைத் தவிர்க்க முயன்றபோது சறுக்கி சாலையின் நடுவில் உள்ள மரத்தில் மோதி தீப்பிடித்தது என்றார்.

மேலும் “பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் உதவ முயன்றனர், ஆனால் தீ வேகமாக பரவியதால் சிரமத்திற்கு உள்ளாகினர்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடலை அகற்றுவதற்கு தங்களுக்கு சுமார் 10 நிமிடங்கள் பிடித்தன என்றும் மேலதிக நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சுஹைமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here