சாப்பிடாமலே உடல் எடை அதிகரிக்குதா ? இது கூட காரணமா இருக்கலாம்..

உடல் எடை கூடுவது பலருக்கும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை முக்கிய காரணங்களாக கூறப்பட்டாலும், தூக்கமின்மையையும் உடல் எடை கூட்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 15 நிமிட குறைவான தூக்கம்கூட நாளடைவிலான உடல் எடையை கூட்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூக்கத்தை எடுத்துக்கொள்ள கூடாது. இல்லையென்றால் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாது.

ஜமா (JAMA) மருத்துவ இதழில் வெளியான ஆய்வில், உடல் எடை கூடுவதற்கும் தூக்கமின்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து சுமார் 1,20,000 பேரிடம் மருத்துவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகளில் இருக்கும் ஸ்லீப் டிராக்கர், பிட்னஸ் டிராக்கர்ஸ் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் அன்றாட நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாள்தோறும் சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் பி.எம்.ஐ அளவு 30 விழுக்காடுக்கு மேல் அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சராசரியான தூக்கத்தை எடுத்துக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் உடல் எடை அதிகரித்திருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் வெளியான பல ஆய்வுகளும் முறையான தூக்கமின்மை இல்லையென்றால் உடல் எடை கூடும் என கூறுகின்றன. சோர்வாக இருக்கும்போது உடலில் உள்ள பசியை தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடு தூண்டப்படுவதுடன், திருப்தியை கொடுக்கும் ஹார்மோன்களின் செயல்பாடு குறைவதாக கூறுகின்றன. இதனால், உடலில் அதிக பசி ஏற்பட்டு, உணவு உண்பது இயல்பாக அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தூக்கம் வருவதுபோல் உணரும் நாட்களில் கலோரிகள் எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகரிக்கிறது.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

ஒவ்வொருவருக்கும் தூங்குவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் என்பது மாறுபடும். பொதுவாக, 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூக்கத்தை எடுத்துக்கொள்ள கூடாது. இல்லையென்றால் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாது. 7 முதல் 9 நேரம் வரை ஒருவர் தூங்கலாம். ஆரோக்கியமான தூக்கத்தை எடுத்துக்கொள்ளும்போது உடலின் கொழுப்பு எரிக்கப்படும். குடல் சம்பந்தமான குரோனிக் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மேலும், மூளை புத்துணர்ச்சியாக செயல்படுவதற்கும் ஆரோக்கியமான தூக்கம் அவசியம். குறைவான தூக்கத்தை எடுத்துக்கொள்ளும் இளைஞர்களில் 55 விழுக்காட்டினரும், 89 விழுக்காடு குழந்தைகளும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.

உணவு முறை மாற்றம்:

ஆரோக்கியமான தூக்கத்தை எடுத்துக்கொள்ளாதவர்களின் உடல், சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள ஒத்துழைக்காது. சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதில் மாற்றம் ஏற்படும். இதனால், இயல்புக்கு மாறாக அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வீர்கள். அப்போது, உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தீர்கள் என்றால், ஆரோக்கியமான டையட்டுடன், நல்ல தூக்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் உடல் எடை குறைப்பு முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here