அனைத்து அஸ்ட்ராஜெனெக்கா தடுப்பூசி மையங்களும் மூடப்படுகின்றது

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து கோவிட் -19 அஸ்ட்ராஜெனெக்கா தடுப்பூசி மையங்களும் (PPV) நாளை (அக். 4) முதல் மூடப்படும்.

கோவிட் -19 தடுப்பூசி வழங்கலுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான சிறப்பு குழு (JKJAV) இரண்டாவது டோஸைத் தவறவிட்டவர்களுக்கான நியமனங்கள் MySejahtera வழியாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியது.

சம்பந்தப்பட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் மையங்களான (PPV) உலக வர்த்தக மையம் கோலாலம்பூர் (WTC), யூனிவர்சிட்டி மலாயா (UM), யூனிவர்சிட்டி கெபங்சஹான் மலேசியா (UKM) மற்றும் ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (IDCC) என்பன அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here