இந்த ஆண்டில் இணைய பரிவர்த்தனைகள் தொடர்பான 9,000 க்கும் மேற்பட்ட புகார்கள்; உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் தகவல்

கோலாலம்பூர்: இந்த ஆண்டு 9,000 க்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனை புகார்கள் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நான்தா லிங்கி இது பற்றி கூறியபோது, அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 9,323 புகார்களில், 8,878 தீர்க்கப்பட்டுள்ளது, ஏனைய 445 புகார்கள் தொடர்பில் இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புகார்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது வழங்கப்பட்டதை விட மாறுபட்ட நிலையில், குழப்பமான விலைகள், போலி பொருட்கள், திருட்டு பொருட்கள் மற்றும் ஆன்லைன் பிரமிட் திட்டங்கள் (online pyramid schemes) போன்ற சிக்கல்களை உள்ளடக்கியது.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்த நுகர்வோரின் புகார்களை அமைச்சகம் தீவிரமாக பார்க்கிறது. அமைச்சின் அதிகார வரம்பின் கீழ் ஏதேனும் குற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு புகாரும் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றார்.

ராபர்ட் லாசன் சுவாட் (GPS-Betong ) கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆன்லைன் சட்டத்தை மீறும் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு எதிராக அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்த புகார்களை நிவர்த்தி செய்ய, அமைச்சகம் சம்பந்தப்பட்ட வணிக வளாகம் அல்லது ஆன்லைன் சந்தை ஆபரேட்டர்களில் சோதனை நடத்தும் என்றும் அலெக்சாண்டர் கூறினார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் போன்ற பிற அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இணையத்தளத்தை முடக்குதல் அல்லது உள்ளடக்கங்களை அகற்றுதல் போன்ற நெறிமுறையற்ற முறையில் செயல்படுவது கண்டறியப்பட்டது என்றார்.

மலேசியாவின் நிறுவன கமிஷனின் (SSM) தரவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி, வணிகப் பதிவுச் சட்டம் 1956 இன் கீழ் மொத்தமாக 297,894 செயலில் உள்ள ஆன்லைன் வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 6,415 நிறுவனங்கள் மற்றும் 1,968 வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2012 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஆன்லைனில் தங்கள் வணிகத்தை தீவிரமாக நடத்துகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 109,534 புதிய ஆன்லைன் வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இது பதிவுசெய்யப்பட்ட மொத்த ஆன்லைன் வணிகங்களின் எண்ணிக்கையில் 42.8 விழுக்காடு ஆகும். 2020 ஆம் ஆண்டில், 132,012 புதிய வணிகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here