தனித்து வாழும் தாய் தன்னுடைய குழந்தைகள் ஆயாவால் துன்புறுத்தப்பட்டதாக போலீஸ் புகார்

தனித்து வாழும் தாய் தனது இரண்டு குழந்தைகள் ஆயாவால் துன்புறுத்தப்பட்டதாக  போலீஸ் புகார் செய்துள்ளார்.  ஏப்ரல் மாதத்தில் ஆயாவிடம் விட்டதாக பிறகு முதல் முறையாக அவர்கள் வீட்டுக்கு வந்த பின்னரே துன்புறுத்தப்பட்டிருப்பதை அறிய முடிந்ததாக கூறினார். 30 வயதான கடை உதவியாளர் ஆறு மற்றும் 11 வயதுடைய தனது மகன்களில் காயங்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் சூடான நீரினால் ஏற்பட்ட காயம் மற்றும் சிகரெட்டால் சுட்ட அடையாளங்கள் உடலில் இருந்ததாகவும்  கூறினார்.

கடந்த வியாழக்கிழமை ஆயா ஒரு இ-ஹெயிலிங் கார் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்பிய பின்னரே தான் கண்டுபிடித்ததாக அவர் கூறினார். ஏப்ரல் மாதத்திலிருந்து RM800 மாதக் கட்டணமாக வழங்கப்பட்ட ஆயாவுடன் குழந்தைகள்  வசித்து வந்தனர். என் கணவர் இறந்த பிறகு, என் வேலை காரணமாக குழந்தைகளை கவனிக்க ஆயாவை வேலைக்கு அமர்த்தினேன் என்று அவர் கூறினார். அறிமுகமானவர்கள் மூலம் அவர் ஆயாவை அறிந்ததாக கூறினார். அந்தப் பெண் தன் வேலையின் காரணமாக, தன் குழந்தைகளை தன் பொறுப்பில் வைத்ததிலிருந்து மூன்று முறை மட்டுமே ஆயாவைப் பார்த்ததாகக் கூறினார்.

உண்மையில், நான் என் குழந்தைகளைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டேன். கோவிட் -19 நோயாளியின் நெருங்கிய தொடர்பு காரணமாக தனிமைப்படுத்தல் உட்பட பல்வேறு சாக்குப்போக்குகளை அவர் எனக்கு அவர் வழங்கினார் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவளது இக்கட்டான நிலையைக் கேள்விப்பட்ட அவளுடைய முதலாளி, பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார். ஆயா இதைப் பற்றி அறிந்ததும், அவர் தனது குழந்தைகளை ஒரு இ-ஹெயிலிங் வாகனம் மூலம் வீட்டிற்கு அனுப்பினார்.

என் மகன் என்னிடம் அவர்கள் பிரம்பு மற்றும் ரப்பர் குழாய்களாலும் தாக்கியதாகவும் மேலும் அவர்களை கட்டிபோட்டு  சூடான நீர் ஊற்றப்பட்டன  அல்லது எரிந்த சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டன. இது கொடுமையானது. என் குழந்தைகளைக் கவனிப்பதற்காக நான் அவருக்கு மாதந்தோறும் பணம் கொடுத்தேன். தனது மகன்கள் வீட்டுக்கு வந்த நாளில் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தாக அவர் கூறினார்.

இஸ்கந்தர் புத்ரி OCPD உதவி ஆணையர் துல்கைரி முக்தார் புகாரினை பெற்றதை உறுதிசெய்தார் மற்றும் 22 முதல் 32 வயதுடைய மூன்று நபர்கள் இந்த வழக்கு விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here