குடும்பத்துடன் இருந்தபோது 3 குழந்தைகள் நீரில் அடித்து செல்லப்பட்டனரா?

SETIU:  சுங்கை கம்போங் மாங்குக் கழிமுகத்தில் நேற்று தங்கள் குடும்பத்துடன் இருந்தபோது மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மூன்று குழந்தைகளும் நூருல்ஹஸ்ய ஹுமிரா சே முகமட் ஹுமைசி, 11, அவரது சகோதரர் முஹம்மது ஆரியன் ஃபஹீம், 7, மற்றும் உறவினர் நூர் அம்னி இன்சிரா சைஃபுல் தர்மிஜி, 9 என அடையாளம் காணப்பட்டனர்.

சேதியு மாவட்ட பேரிடர் குழு தலைவர் ரோஸ்லி லத்தீஃப், சம்பவத்திற்கு முன், மூன்று பெரியவர்கள் மற்றும் ஆறு குழந்தைகள் நீரில்  இருந்தார்கள் என்று கூறினார். அலை மிக வேகமாக உயர்ந்தது. பெரியவர்கள் மூன்று குழந்தைகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. மற்ற மூன்று குழந்தைகளும் நீருக்குள் காணாமல் போயினர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை, ரேலா மற்றும் கிராம மக்கள் ஆகியோரின் உதவுயுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here