மலேசியாவில் இனப் பாகுபாடு: இந்துக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

‘State of Discrimination Survey 2023′ இன் வாக்கெடுப்பின் அடிப்படையில், மலேசியாவில் மிக உயர்ந்த அளவிலான மக்கள் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் மதம், பொருளாதார நிலை அல்லது பாலினம் போன்ற காரணிகளின் அடிப்படையிலும் பாகுபாடுகள் நிகழ்கின்றன என அவ்வாக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய மக்கள் பங்குபற்றிய இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 3,238 பதில்களையும் ‘State of Discrimination Survey 2023′ பெற்றுள்ளது. 

மலேசியாவில் உள்ள பாகுபாட்டின் அளவு அம்சங்கள், குறிப்பாக இனம் மற்றும் மதம் போன்ற பல்வேறு அடையாளங்களைப் பற்றிய அடிப்படை நுண்ணறிவுகளை வழங்குவதே இந்த வாக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

இதில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 43 விழுக்காட்டினர் இனம், தோல் நிறம், கலாச்சாரம், மரபுகள், சொந்த மொழி மற்றும்  பேச்சுவழக்கு ஆகியவற்றுடன் தொடர்புடைய பாகுபாட்டை அனுபவிப்பதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் 25 முதல் 39 வயதுடையவர்களில் 34 விழுக்காட்டினரும், 40 முதல் 59 வயதுடையவர்களில் 23 விழுக்காட்டினர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2 விழுக்காட்டினர் இதேபோல் உணர்ந்தனர் எனக்கூறப்படுகிறது.

மேலும் குறித்த கணக்கெடுப்பின்படி, சமூக ஊடகங்களில் (32%), வேலை விண்ணப்பங்களின் போது (30%) மற்றும் பணியிடத்தில் (29%) பெரும்பாலான பாகுபாடுகள் காணப்படுகின்றன என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here