கோத்தா கினபாலு, அக்டோபர் 23 :
16 வயதுக்கு குறைந்த குழந்தை பராமரிப்பாளரான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 49 வயதான ஒரு ஆடவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (2) (d) ன் கீழ் சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீதிபதி அபு பக்கர் மனத் முன்னிலையில் அவர் தான் குற்றவாளி அல்ல என்று மறுப்புத் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்படடால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் வழங்க இப்பிரிவு வழிசெய்கிறது.
கடந்த மே 8, ஜூலை இறுதி மற்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் என பலதடவைகள் பெனாம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில், 14 வயது மற்றும் ஐந்து மாதங்கள் ஆன அந்தச் சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை, மேலும் அவர் வழக்கு முடிவடையும் வரை காவலில் வைக்கப்படுவார் என்று நீதிமன்றம் கட்டளையிட்டது.
மேலும் எதிர்வரும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முன் விசாரணைக்காக இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது .
துணை அரசு வழக்கறிஞர் சிட்டி ஹஜார் மஸ்லான் அரசு தரப்பில் இவ்வழக்கை நடத்தினார்.



















