மலேசியாவில் திங்கள்கிழமை (அக்டோபர் 25) 4,782 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை (அக் 24) பதிவான 5,666 தொற்றுகளை விட சற்றே குறைவு.
ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைவர் இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒட்டுமொத்தமாக நாட்டில் 2,436,498 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.























