தனிப்பட்ட வருவாயை இழந்தவர்களுக்கான 500 வெள்ளி உதவித்தொகை வழங்கும் பணி நாளை ஆரம்பம்

கோலாலம்பூர்: கோவிட் -19 இடர்காலத்தில் தனிப்பட்ட வருமானம் இழந்தவர்களுக்கான (BKP) அரசின் உதவித்தொகை 500 வெள்ளி பணம் வழங்கும் பணி நாளையிலிருந்து தொடங்குகின்றது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ சப்ரி யாக்கப் கூறினார்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கில், தமது வருமானத்தை இழந்த கிட்டத்தட்ட 870,000 நபர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

“மலேசிய குடும்பத்தின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாடுபடும், குறிப்பாக Covid-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை எப்போதும் அனைத்து வழிகளிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்றார் .

“தங்கள் வருமானத்தை இழந்த (BKP) மக்களுக்கு உதவும் வகையில் 500 வெள்ளி பணம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021 தொடங்கும்.

“இந்த உதவிகள் அனைத்திலுமூடாக மலேசிய குடும்பத்தின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் 434 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது ” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here