MySejahtera செயலியில் தடுப்பூசிக்கான சரிபார்ப்பு செயல்முறையை பயனீட்டாளர்கள் தவிர்ப்பதால், தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படவில்லை

கோலாலம்பூர், அக்டோபர் 26 :

MySejahtera செயலியில் கோவிட்-19 தடுப்பூசிக்கான சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல் செயல்முறையை பயனீட்டாளர்கள் தவிர்த்துவிட்டதால், கோவிட்-19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு புதுப்பிக்கப்படாமல் அல்லது MySejahtera இல் காட்டப்படவில்லை.

மற்றொரு MySejahtera கணக்கின் கீழ் தடுப்பூசி சார்ந்து பதிவுசெய்யப்பட்டவர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பெறுவதற்கு, தங்கள் சொந்த கணக்கை உருவாக்குவதற்கு முன்னர் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த உரிமையாளரின் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று MySejahtera குழு தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் இன்று தெரிவித்திருந்தது .

“டிஜிட்டல் சான்றிதழ்களை இழந்த நபர்கள் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முடித்தாலும் அவர்களின் தடுப்பூசி பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், எங்கள் உதவி மையத்திற்கு புகாரளிக்கலாம்” என்று MySejahtera குழு இன்று டுவீட் செய்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு உதவி பெறவும் தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும் குழு பல வீடியோ வழிகாட்டிகளையும் அது பதிவில் தனது பதிவில் பகிர்ந்து கொண்டது.

இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற நபர்கள், MySejahtera செயலி மூலம் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயண நோக்கங்களுக்காக PDF வடிவத்தில் தடுப்பூசி சான்றிதழ்களை அச்சிட பயனீட்டாளர்களை அனுமதிக்கும் வகையில் இந்த MySejahtera செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here