பகாங்கில் உள்ள 2 இடங்களில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு (EMCO) அமல்

கோலாலம்பூர், நவம்பர் 10 :

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பர் 25ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு பகாங்கில் உள்ள லாடாங் FGV மெங்கராக் 1, பெரா மற்றும் ஃபெல்டா சினி 3, முக்கிம் பென்யோர், பெக்கான் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) செயல்படுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முஹமட் சாட் இதுபற்றிக் கூறுகையில், சுகாதார அமைச்சகத்தின் (MOH) இடர் மதிப்பீடு மற்றும் உள்ளூர் கோவிட்-19 தொற்று பற்றி ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

“அனைத்து EMCOகளுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) முன்பு அறிவிக்கப்பட்டதைப் போலவே தொடர்ந்தும் இருக்கும், அதே நேரத்தில் EMCO நீட்டிக்கப்படவோ மற்றும் நிறுத்தப்படவோ மாட்டாது ,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here