மூன்று கார்கள் மற்றும் மின்சார சைக்கிள் மோதிய விபத்தில், 10 வயது சிறுவனும் சாலையில் நடந்து சென்ற (பாதசாரி) ஒருவரும் பலி

செட்டியூ, நவம்பர் 12 :

இங்குள்ள ஜாலான் புக்கிட் புத்ராவில், நேற்று இரவு மூன்று கார்கள் மற்றும் மின்சார சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெரோடுவா மைவியால் தாக்கப்பட்ட மின்சார சைக்கிள் ஓட்டுநர் முஹமட் அடிஃப் டேனியல் அஸ்மான், 10, என்ற சிறுவன் மற்றும் சாலையில் நடந்து சென்ற (பாதசாரி) அசுகா முஹமட், 46, ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

செட்டியூ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் அஃபாண்டி ஹுசைன் இதுபற்றிக் கூறுகையில், தெலகா பாப்பானைச் சேர்ந்த 36 வயது நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி வகை கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையின் பாதையில் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

“இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட வாகனம் முஹமட் அடிஃப் டேனியல் அஸ்மான், மற்றும் அவரது உறவினர் அஹமட் சியாஹிரான் சைபுல் ரஸாலி, 13 ஆகியோர் பயணித்த மின்சார சைக்கிள் மீது மோதியது.

சம்பவத்தின் போது, ​​முஹம்மது அடிஃப் டேனியல் மற்றும் அஹமட் சியாஹிரான் ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே கால்பந்து போட்டியை பார்த்துவிட்டு கம்போங் புக்கிட் புத்ராவில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மேலும் “கட்டுப்பாட்டை இழந்த பெரோடுவா மைவி கார் சாலையின் அருகில் இருந்த புரோட்டான் வீரா வகை காருடன் மோதிய பின் பாதசாரி (அசுகா) மீதும் மோதியது.

“இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் சாலையில் இருந்த மற்றுமொரு புரோட்டான் மீது தூக்கி வீசப்பட்டார்,” என்று அவர் இன்று கூறினார்.

இச்சம்பவத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செட்டியூ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பலத்த காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அஃபாண்டி கூறினார்.

அத்தோடு பெரோடுவா மைவியின் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 இன் படி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here